கொடைக்கானல் காட்டில் நடிகை மாயம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

புதுமுகம் அம்ருத் ஹீரோவாகவும் 'பட்டாளம்' படத்தில் அறிமுகமான அஞ்சனா ஹீரோயினாகவும் நடிக்கும் படம் 'உங்கள் விருப்பம்Õ. கருணாகரன் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக கொடைக்கானல் மலையில் நடந்து வருகிறது. அடர்ந்த காட்டு பகுதிக்குள் நடந்த படப்பிடிப்புக்கு செல்லும் வழி தெரியாமல் ஹீரோயின் அஞ்சனா மாயமானார். படப்பிடிப்பு குழுவினர் காடு முழுவதும் அவரை தேடினர். 3 மணி நேரத்துக்கு பின் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து சேர்ந்தார்.
இது பற்றி அஞ்சனா கூறியதாவது:  சில நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் நகரிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் மண்ணனூர் காட்டுக்குள் ஷூட்டிங் நடந்தது. அப்போது படிப்
பிடிப்பு குழுவினருடன் சென்று கொண்டிருந்தேன். நானும் அம்மாவும் சென்ற கார் கடைசியாக வந்து கொண்டிருந்தது. அது திடீரென பஞ்சராகி நின்றது. அதை கவனிக்காமல் மற்றவர்கள் சென்று விட்டார்கள். நாங்கள் பஞ்சரை சரி செய்துவிட்டு சென்றோம்.
அதற்குள் படப்பிடிப்பு குழுவினர் சாலையிலிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்று விட்டனர். அவர்களை செல்போனில் தொடர்பு கொண்டபோது சில அடையாளங்களை சொல்லி இறங்கி வரச் சொன்னார்கள். நானும் அம்மாவும் தனியாக ஒற்றையடி பாதையில் இறங்கி சென்றோம். ஆனால் நாங்கள் திசைமாறி வேறு பகுதிக்கு சென்று விட்டோம். 4 கிலோ மீட்டர் நடந்து சென்றோம். அங்கு சிறு கிராமம் இருந்தது. அங்கிருந்த ஆதிவாசிகள் மெயின் ரோடுக்கு செல்ல வழிகாட்டினர். பின், செல்போன் சிக்னல் கிடைத்தது. இயக்குனரை தொடர்பு கொண்டு காட்டில் தனியாக மாட்டிக் கொண்டதை சொன்னோம். அவர்களும் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு எங்களை தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சொன்ன அடையாளங்களை வைத்து ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து சேர்ந்தோம். சுமார் 3 மணி நேரம் காட்டில் சிக்கி தவித்தோம். இவ்வாறு அஞ்சனா கூறினார்.

Comments

Most Recent