'வீடு’ என்ற படத்துக்காக பாலு மகேந்திரா நிஜ வீட்டையே கட்டி காட்சிகளை படமாக்கினார். அதேபோல் ஆர்ட் டைரக்டர் எஸ்ஏசி ராம்கி இயக்கும் 'ந...
'வீடு’ என்ற படத்துக்காக பாலு மகேந்திரா நிஜ வீட்டையே கட்டி காட்சிகளை படமாக்கினார். அதேபோல் ஆர்ட் டைரக்டர் எஸ்ஏசி ராம்கி இயக்கும் 'நானும் என் காதலும்’ என்ற படத்துக்காக நிஜ வீடு கட்டப்படுகிறது. கட்டுமான பணியில் தொடங்கி கிரகப்பிரவேசம் வரை இதில் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. 'கதையின் உயிர்நாடியே வீடுதான். யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதால் வீடு கட்டி படமாக்குகிறோம். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி திருத்தணி முருகன் கோயிலில் படமாக்கினோம். இதற்காக திட்டமிட்டு, அரசு அனுமதிக்காக காத்திருந்தோம். 3 மாத காத்திருப்புக்கு பின் விசேஷ அனுமதியுடன் காட்சி படமாக்கப்பட்டது. 15 வருடங்களுக்கு பிறகு இந்த கோயிலில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதில் புதுமுகங்கள் நடிக்கின்றனர். கதையின் தன்மைக்கு தேவை என்பதால் அந்தந்த நடிகர்களையே டப்பிங் பேச வைத்திருக்கிறேன்’ என்றார் ராம்கி.
Comments
Post a Comment