அமெரிக்க தோழிகள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சமீபத்தில் மலையாள பட ஷூட்டிங்கிற்காக அமெரிக்கா சென்று வந்தார் பாவனா. இதில் திலீப் ஜோடியாக அவர் நடிக்கிறார். படத்தில் இன்னொரு ஹீரோயின் காவ்யா மாதவன். அமெரிக்காவில் 20 நாள் ஷூட்டிங். அப்போது காவ்யா மாதவன், பாவனா இடையே நட்பு மலர்ந்திருக்கிறது. ‘வழக்கமாக என்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் நட்புடன் பழகுவேன். அந்த நட்பு, பணி சார்ந்ததாகவே இருக்கும். ஆனால் காவ்யாவுடன் ஏற்பட்ட நட்பு, வித்தியாசமானது. எங்களுடைய பர்சனல் விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு தோழிகள் ஆகிவிட்டோம். ஷூட்டிங் முடிந்ததும் நியூயார்க் நகரை சுற்றுவதுதான் எங்கள் வேலை. நிறைய இடங்களுக்கு போனோம். ஷாப்பிங் செய்தோம்’ என பூரிக்கிறார் பாவனா.

Comments

Most Recent