முட்டை வீசிய வழக்கில் மேட்டூர் கோர்ட்டில் அடுத்த மாதம் 4ம் தேதி நடிகை குஷ்பு ஆஜராகி சாட்சியளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...
முட்டை வீசிய வழக்கில் மேட்டூர் கோர்ட்டில் அடுத்த மாதம் 4ம் தேதி நடிகை குஷ்பு ஆஜராகி சாட்சியளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 2005ம் ஆண்டு ஒரு வழக்கு தொடர் பாக நடிகை குஷ்பு ஆஜராக வந்தார். அப்போது சிலர், அவர் மீது முட்டை, தக்காளி ஆகியவற்றை வீசினர். இதுகுறித்து அப்போது பணியில் இருந்த தாசில்தார் பைஸ் முகமதுகான் மேட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதுகுறித்து விசாரித்த மேட்டூர் காவல் துறையினர் 41 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மேட்டூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெறுகிறது. இந்த வழக்கில் சாட்சியாக குஷ்புவை விசாரிக்க வேண்டும் என அரசு வக்கீல் கார்த்திகேயன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். எதிர்தரப்பு வக்கீல் முருகன், இதற்கு ஆட்சேபணை தெரிவித்து மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதித்துறை நடுவர் பகவதியம்மாள், 'அடுத்த மாதம் 4ம் தேதி நீதிமன்றத்தில் நடிகை குஷ்பு ஆஜராகி சாட்சியளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.
Comments
Post a Comment