இந்தி பட தயாரிப்பாளரும் நடிகருமான விவேக் சுதர்சனை, ஷாயாலி பகத் காதலித்து வருவதாக மும்பை வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது.'நியூட்டன...
இந்தி பட தயாரிப்பாளரும் நடிகருமான விவேக் சுதர்சனை, ஷாயாலி பகத் காதலித்து வருவதாக மும்பை வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது.'நியூட்டனின் மூன்றாம் விதி' படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தவர் இந்தி நடிகை ஷாயாலி பகத். இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோபிப் மாலிக்கை காதலித்து வந்ததாக முதலில் கூறப்பட்டது. இப்போது 'தேக் ஏ தேக்' என்ற இந்தி பட தயாரிப்பாளர் விவேக் சுதர்சனை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. விவேக் சுதர்சன், 'ஐ&விவேக்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார். அவர் ஜோடியாக ஷாயாலி நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கோவாவில் நடந்த போது, இவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக பட வட்டாரங்கள் தெரிவித்தன. 'இருவருமே ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். இப்போது காதலை வெளியில் சொல்ல, அவர்கள் விரும்பவில்லை' என்று விவேக்கிற்கு நெருங்கியவர்கள் கூறியுள்ளனர்.
Comments
Post a Comment