சொந்தங்களுக்காக தயாரிப்பாளராகும் நடிகைகள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

அந்த காலத்தில் இருந்தே பல ஹீரோயின்கள் சொந்த படம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதில் குறைவானவர்களே வெற்றி பெற்றிருக்கிறார்கள். பெரும்பாலானோருக்கு கிடைத்தது தோல்விதான். அப்படி இருந்தும் இப்போது சில நடிகைகள் சொந்த படம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு காரணம், தங்கள் சொந்தங்களை சினிமாவில் ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கம்தான். தன் மகன் அம்ரேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் 'நானே என்னுள் இல்லை' படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார் ஜெயசித்ரா. விரைவில் சென்னையில்
குடியேற உள்ள சிம்ரன், சொந்த படம் தயாரிக்கிறார். இதில் தனது கணவர் தீபக் பகாவை ஹீரோவாக்க திட்டமிட்டுள்ளாராம். ‘திருமதி தமிழ்’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் ராஜகுமாரன். இதை தயாரிப்பது அவர் மனைவி தேவயானி. திருமணத்துக்கு பின் மும்பையில் வசித்து வரும் நவ்யா நாயரும் மலையாள பட தயாரிப்பில் ஈடுபட உள்ளார். இவரும் தனது கணவருக்கு இதில் முக்கிய பொறுப்பை தர உள்ளதாக கூறப்படுகிறது. பாடகர் கிரிஷை ஹீரோவாக்க சங்கீதா முயற்சித்து வந்தார். அதற்கு பலன் கிடைக்கவில்லை. அதனால் சங்கீதாவும் தயாரிப்பாளராக முயற்சித்து வருகிறாராம்.

Comments

Most Recent