மீண்டும் நாயகியான சுஹாசினி!

http://thatstamil.oneindia.in/img/2010/07/26-ullamellam-talladuthe200.jpg
முன்னாள் கதாநாயகியான சுஹாசினி, கதையின் நாயகியாக உள்ளமெல்லாம் தள்ளாடுதே படத்தில் முக்கியப் பாத்திரம் ஏற்றுள்ளார்.

சுஹாசினி இப்போதெல்லாம் நடிப்பதில்லை. ஜெயா டிவியில் திரைப்பட விமர்சன நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அது போக சமீபத்தில் வசனகர்த்தா என்ற புதிய அவதாரத்தையும் ராவணன் படம் மூலம் எடுத்தார்.

தற்போது தமிழ் சினிமாவில், கதை நாயகன், கதை நாயகி என்ற புதிய டிரெண்ட் பாப்புலராகியுள்ளது. அந்த வரிசையில் சுஹாசினியும் கதைநாயகியாகியுள்ளார்.

உள்ளமெல்லாம் தள்ளாடுதே என்ற படத்தில் கதையின் நாயகி சுஹாசினிதானாம். இளம் வயதில் விதவையாகும் ஒரு பெண் தனது வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகள், உணர்ச்சிப் போராட்டங்கள் உள்ளிட்டவற்றை ஆராயும் படமாம் இது.

இப்படத்தில் சுஹாசினியின் மகள் வேடத்தில் அர்ச்சனா நடித்துள்ளார். இவர் வேகம் படத்தின் நாயகியாவார்.

இப்படத்தை இயக்குபவர் நாகேந்திர குமார். இந்தப் படம் சுஹாசினிக்கு விருது பெற்றுத் தரும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் நாகேந்திர குமார்.

Comments

Most Recent