தமிழகத்தில் ஷூட்டிங்குக்கு வர ஆசின் அச்சம்

http://thatstamil.oneindia.in/img/2010/07/08-asin-1-200.jpg

இலங்கையில் ரெடி படத்துக்காக படப்பிடிப்புக்குப் போயுள்ளதால் தன் மீது தமிழ் அமைப்புகளும், திரையுலகினரும் கோபத்துடன் உள்ளதால், தமிழகத்தில் நடைபெறும் காவல் காதல் பட ஷூட்டிங்குக்கு வருவதற்கு ஆசின் அச்சப்படுகிறாராம்.

திரையுலகினர் விதித்த பல்வேறு கட்டுப்பாடுகளை மீறி சல்மான் கானுடன் ரெடி படத்தின் ஷூட்டிங்குக்காக இலங்கையில் முகாமிட்டுள்ளார் ஆசின். இதனால் அவருக்கு தென்னிந்தியத்திரையுலகினர் தடை விதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் அவர்களோ இதுவரை எதையும் அறிவிக்காமல் அமைதியாக உள்ளனர்.

இந்த விவகாரத்தை அப்படியே மழுப்பலாக்கி ஆசினை மன்னித்து விட்டு விடும் வாய்ப்புகளும் கூட அரசல் புரசலாக காதுகளுக்கு வருகிறது.

இந்த நிலையில் விஜய்யுடன் தற்போது நடித்து வரும் காவல் காதல் (காவல்காரன் படம் பெயர் மாறி விட்டது) படத்தின் ஷூட்டிங்குக்கு ஆசின் தமிழகம் வரவேண்டியுள்ளது. ஆனால் எங்கே தன்னைக் குறித்து பிரச்சினை உருவாகுமோ என்ற அச்சத்தில் உள்ளாராம் ஆசின்.

இந்த அச்சம் குறித்து கொழும்பில் உள்ள ஒரு பத்திரிகைக்கு செய்தி கொடுத்துள்ளார் ஆசின்.

ஏற்கனவே காவல் காதல் படத்தின் 3 ஷெட்யூல் முடிந்து விட்டது. இன்னும் பல காட்சிகள் மீதமுள்ளன. அதற்காக அவர் சென்னைக்கு வர வேண்டியுள்ளது. இந்த நிலையில் கொழும்பு மீ்டியாக்களிடம், சென்னைக்குப் போகவே அச்சமாக உள்ளது என்று பேட்டி கொடுத்துள்ளார் ஆசின்.

Comments

Most Recent