குரோர்பதியில் மீண்டும் அமிதாப்

http://media247.co.uk/bizasia/newsarchive/images/kbc_sony001.jpg
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுத்த டி.வி, நிகழ்ச்சி குரோர்பதி. இந்திப்படவுலகில் 2000ம் ஆண்டில் அமிதாப் தேக்க நிலையில் இருந்தபோது கைகொடுத்த இந்த நிகழ்ச்சி மீண்டும் புத்துயிர் பெறுகிறது. பொது அறிவு அடிப்படையில் போட்டியாளர்களிடம் அமிதாப், கேள்விகளைக் கேட்டு பதில் பெறுகிற விதம், வார்த்தைகளை அவர் உச்சரிக்கிற விதம் இளையோர் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் இரு பாலரையும் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியினால் அமிதாப்பின் நிலை மட்டுமல்லாது, ஸ்டார் பிளஸ் டி.வி.யின் நிலையும் உயர்ந்தது.

காலப்போக்கில் உடல்நலக்குறைவு காரணமாக அமிதாப் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொண்டார். அவரைத் தொடர்ந்து ஷாரூக் கான் அந்த நிகழ்ச்சியை வழங்கி வந்தார். இந்நிலையில் இப்போது குரோர்பதியின் 4வது சீசன் சோனி டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க அமிதாப்பை அணுகியிருக்கிறார்கள். அமிதாப்பும் ஓ.கே., சொல்லி விட்டார் என்று சோனி நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Comments

Most Recent