கமர்சியல் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக பத்மப்ரியா கூறினார். மேலும் அவர் கூறியதாவது: மன நிறைவுக்காக நிறைய படங்களில் நடித்து ...
கமர்சியல் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக பத்மப்ரியா கூறினார். மேலும் அவர் கூறியதாவது: மன நிறைவுக்காக நிறைய படங்களில் நடித்து விட்டேன். அதற்காக பல விருதுகளும் வாங்கி விட்டேன். ஆனால் கமர்சியல் ஹீரோயின்களுக்குள்ள முக்கியத்துவமும் அங்கீகாரமும் தனியாக உள்ளது. அதனால் இனி சில வருடங்களுக்கு கமர்சியல் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்திருக்கிறேன். இந்தியில் கதையம்சமுள்ள படத்தில் நடித்தேன். நல்ல பெயர் கிடைத்தது. அதற்கு பிறகு வந்த படங்களும் அதேபோன்று வந்தது. ஐந்து படங்கள் வரை நிராகரித்துவிட்டேன். கிளாமராக நடிக்க தயாராக இருக்கிறேன். கமர்சியல் ஹீரோயினாக அங்கீகாரம் கிடைத்த பிறகு எந்த படத்தில் நடித்தாலும் அதற்கான வியாபார வளையம் பெரிதாக இருக்கும். அதன் பிறகு வித்தியாசமான முயற்சிகள் எடுத்தால் அதற்கு அங்கீகாரம் கிடைக்கும்.
Comments
Post a Comment