சிவப்பதிகாரம், குரு என் ஆளு படங்களில் நடித்தவர் மம்தா. இவர் பின்னணி பாடகியாகவும் உள்ளார். இவரை பாடகியாக அறிமுகப்படுத¢தியவர் இசையமைப்பாளர் ...
சிவப்பதிகாரம், குரு என் ஆளு படங்களில் நடித்தவர் மம்தா. இவர் பின்னணி பாடகியாகவும் உள்ளார். இவரை பாடகியாக அறிமுகப்படுத¢தியவர் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். இருவரும் காதலிப்பதாக முன்பு கிசுகிசு பரவியது. பின் இவர்கள் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இப்போது மீண்டும் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதுபற்றி மம்தா கூறுகையில், தேவி ஸ்ரீபிரசாத் எனக்கு பாட வாய்ப்பு தந்தவர். அவரால்தான் பின்னணி பாடகி ஆனேன். நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம்.
அதனால் வெளி இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்தோம். இதை வைத்து நாங்கள் காதலிப்பதாக சொல்வது வேடிக்கையாக உள்ளது. தொடர்ந்து தேவியின் பாடல்களை நான் பாடுவதாகவும் சொல்கிறார்கள். அதிலும் உண்மை இல்லை. இந்த பாடலுக்கு என் குரல் நன்றாக இருக்கும் என தேவி எண்ணினால் மட்டுமே வாய்ப்பு தருவார் என்றார். தேவி ஸ்ரீபிரசாத், தற்போது கமல்ஹாசன் நடிக்கும் மன்மதன் அம்பு, விக்ரம் நடிக்கும் 'வெடி', ஹரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ஆகியவற்றுக்கு இசை அமைக்கிறார்.
Comments
Post a Comment