விக்ரம் நடிப்புத் திறமை: ஆச்சரியத்தில் பாலிவுட்

http://2.bp.blogspot.com/_kLvzpyZm7zM/S-6nLa7sxqI/AAAAAAAAM2Y/mtjcocXUB8M/s400/vikram-ravana-raavanan-wallpapers-03.jpg
ராவணன் படம் வெற்றியா, தோல்வியா என்ற விவாதம் ஒரு புறம் இருக்கட்டும். விக்ரம் வெற்றி அடைந்து விட்டார் என்பதில் சந்தேகம் இருக்கிறதா?தமிழ் ராவணன் விக்ரமின் இமேஜ் தமிழில் உயர்த்த உதவி இருக்கிறதோ இல்லையோ, இந்தி ராவணன் பாலிவுட்டில் ஒரு தேர்ந்த நடிகராக அவரை அடையாளம் காட்டி இருக்கிறது. ஒன்றுக்கு ஒன்றுக்கு மாறுபட்ட இரண்டு கதாபாத்திரங்களை தமிழிலும் இந்தியிலும் நடித்திருக்கும் விக்ரமின் நடிப்புத் திறமையைப் பார்த்து இந்தித் திரைப்படத்தினர் பலரும் வியப்பில் வாயடைத்துப் போயிருக்கிறார்கள்."தர்த்தி' (சிவந்தமண் படத்தின் இந்தி) படம் வந்தபோது சிவாஜி கணேசனையும் ஏக் துஜே கே லியே வந்தபோது கமல்ஹாசனையும் பிரமிப்பாகப் பார்த்தது போல இப்போது ராவணன் படத்திற்குப் பிறகு விக்ரமை இந்திப் பட உலகம் வியப்புடன் பார்க்கிறது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.யார் கண்டது? பாலிவுட்டும் ஹாலிவுட்டும் விக்ரமின் நடிப்புக்குத் தலைவணங்கித் தங்களது கதவுகளைத் திறக்க இருக்கின்றனவோ என்னவோ?!

Comments

Most Recent