பிரியதர்ஷன் இயக்கும், 'கட்டா மிட்டா' என்ற இந்திப் படத்தில் அக்ஷய்குமார் ஜோடியாக நடித்துள்ளார் த்ரிஷா. இந்தப் படம் வரும் 23&ம் ...
பிரியதர்ஷன் இயக்கும், 'கட்டா மிட்டா' என்ற இந்திப் படத்தில் அக்ஷய்குமார் ஜோடியாக நடித்துள்ளார் த்ரிஷா. இந்தப் படம் வரும் 23&ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதுபற்றி த்ரிஷா கூறியதாவது: அக்ஷய்குமாரின் சொந்த தயாரிப்பில் நடிப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். இந்தி திரையுலகம் புதியவர்களுக்கு எப்போதும் வாசலை திறந்தே வைத்திருக்கிறது. ஸ்ரீதேவி, அசின், ஜெனிலியா தமிழில் இருந்து இந்திக்கு வந்தவர்கள். அவர்கள் எல்லாருக்குமே நல்ல இடத்தை இந்தி திரையுலகம் கொடுத்திருக்கிறது. எனக்கும் அந்த இடம் கிடைக்கும். இந்தியிலும் சாதிப்பேன். எனக்கு இந்தியில் எழுத படிக்க தெரியும் என்றாலும் இதில் டப்பிங் பேசவில்லை. 'கட்டா மிட்டா' காமெடி படம்தான். ஆனால், எனது கேரக்டர் சீரியசாக இருக்கும். காமெடியை அக்ஷய்குமார் பார்த்துக்கொள்கிறார். இவ்வாறு த்ரிஷா கூறினார்.
Comments
Post a Comment