ஆடியோ ‌வெளியீட்டு விழாவில் கண்ணீர் வடித்த ராமராஜன்

http://www.kollywoodtoday.com/wp-content/uploads/2008/07/ramarajan-ju29-2008.jpg
கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன் உள்ளிட்ட பல வெள்ளிவிழா படங்களில் நடித்த ராமராஜன் இடைவெளிக்குப் பின் மேதை என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிலிம்பேர் தியேட்டரில் நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ராமராஜனின் ரசிகர்கள் கலந்து கொண்டனர். சென்னை நகர திரையேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், பெப்சி தலைவர் வி.சி.குகநான் ஆகியோர் பாடல்களை வெளியிட, பார்த்திபன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் ராமராஜன் உணர்ச்சிபொங்க பேசி கண்ணீர் வடித்தார். அவர் பேசுகையில், `என்னிடம் டைரக்டர்கள் கதை சொல்ல வரும்போது, கதையை மட்டும்தான் கேட்டேன். பணம் எவ்வளவு? என்று கேட்டதில்லை. பெரிய பட நிறுவனங்களின் படங்களில் ஏன் நடிக்கவில்லை? என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். எனக்கு, பணக்காரரை மேலும் பணக்காரர் ஆக்குவதில் உடன்பாடு இல்லை. சாமான்யர்களை பணக்காரர்கள் ஆக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதனால்தான் சிறு பட தயாரிப்பாளர்களின் படங்களில் மட்டும் நடித்தேன். ஒரே வருடத்தில், எட்டு படங்களில் நடித்து இருக்கிறேன். இப்போது எட்டு வருடங்களுக்கு பிறகு ஒரு படத்தில் நடித்து இருக்கிறேன். நான் நடித்த படம் வெளிவந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. என்றாலும், பத்தாயிரம் மன்றங்கள் இன்னும் செயல்படுகின்றன.என் தாய்-தந்தையை விட, உங்களுக்குத்தான் (ரசிகர்களுக்குத்தான்) அதிகம் கடமைப்பட்டு இருக்கிறேன், என்று கூறிவிட்டு கண்கலங்கி அழுதார். உடனே அங்கு கூடியிருந்த ரசிகர்கள், `நீங்கள் அழக்கூடாது. நாங்கள் உங்களுடன் எப்போதும் இருப்போம்' என்று ஒருமித்த குரலில் தெரிவித்தனர். இதையடுத்து கண்களை துடைத்துக் கொண்டு ராமராஜன் வந்திருந்த எல்லோருக்கும் நன்றி தெரிவித்தார்.

Comments

Most Recent