களவாணி விமலை மனதார பாராட்டிய பாலா!

http://img1.dinamalar.com/cini//CNewsImages/2342kalavani_vimal.jpg
பசங்க படத்தில் இங்கிட்டு மீனாட்சி... அங்கிட்டு...? என்ற ஒரே டயலாக்கில் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடி‌கர் விமல். கூ‌த்துப்பட்டறையில் இருந்து சினிமா கொட்டகைக்கு வந்திருக்கும் இவர் சமீபத்தில் களவாணி படத்தில் அறிக்கி அலைஸ் அறிவழகன் கேரக்டரில் நடித்திருந்தார். பசங்க இங்கிட்டு மீனாட்சி போலவே, இப்படத்தில் அறிக்கி கேரக்டரும் நல்ல ‌வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் புல்லரித்துப் போய் இருக்கிறார் விமல்.

இதுபற்றி அவர் அளித்துள்ள ‌பேட்டியில், பசங்க வெளியான பிறகு என்னை எல்லோரும் மீனாட்சி சுந்தரம் என்றுதான் கூப்பிட்டார்கள். இப்போது எங்கு பார்த்தாலும் அறிவழகா என்கிறார்கள். பெருமையாக இருக்கிறது. ரசிகர்கள் மட்டுமல்லாமல், சசிக்குமார் சார், பாலா சார், பசங்க இயக்குநர் [^] பாண்டிராஜ் சார் என எல்லோருமே என்னைப் பாராட்டுகிறார்கள். அதிலும் பாலா சார் என்னிடம் நீண்ட நேரம் பாராட்டிப் பேசினார். ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு நல்ல படம் பார்த்தேன் என்று கூறிய பாலா சார், ரொம்ப நேச்சுரலாக நடிக்கிறாய். களவாணி படத்தில் உனது நடிப்பு நடிப்பு போலவே தெரியவில்லை. இதே போல விதம் விதமான கேரக்டர்களில் நடி, உனது நேச்சுரல் நடிப்பை விட்டு விடாதே என்றும் அட்வைஸ் செய்தார், என்று கூறியுள்ளார்.

ரசிகர்களிடையே நல்ல கிராமத்து நாயகனாக அறிமுகமாகியிருக்கும் விமலுக்கு நகரத்து இளைஞராகவும் நடிக்க ஆசையாம். வில்லேஜ் இமேஜ் வந்து விடாமல் கவனமாக இருக்க விரும்புகிறேன் என்று சொல்லும் விமல் அடுத்து நடிக்கும் படமும் கிராமத்து கதைதான். மதுரையை மையமாகக் கொண்டு உருவாகும் தூங்கா நகரம் என்ற படத்தில் கண்ணன் என்ற கேரக்டரில் நடிக்கிறார் விமல்.

Comments

Most Recent