Ôதீராத விளையாட்டு பிள்ளைÕ, Ôயாவரும் நலம்Õ படங்களில் நடித்தவர் நீது சந்திரா. இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். பாடகர் தலேர் மெகந்தி...
Ôதீராத விளையாட்டு பிள்ளைÕ, Ôயாவரும் நலம்Õ படங்களில் நடித்தவர் நீது சந்திரா. இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார். பாடகர் தலேர் மெகந்தியின் தம்பி மிகா சிங். இவர் பாப் இசை பாடகர். இவர் ஏற்கெனவே ராக்கி சாவன்த்துடன் இணைத்து பேசப்பட்டவர். ராக்கியின் பிறந்த நாள் பார்ட்டியில் அவருக்கு திடீர் முத்தம் தந்து பரபரப்பை ஏற்படுத்தினார். மிகா தன்னை கேவலப்படுத்திவிட்டதாக ராக்கி புகார் கூறினார். இதையடுத்து இவர்கள் உறவு முறிந்தது. இப்போது நீதுவும் மிகாவும் நெருங்கி பழகுவதாக பாலிவுட்டில் கிசு கிசு கிளம்பியுள்ளது. நீது நடித்த Ôஓய் லக்கி லக்கி ஓய்Õ படத்தில் மிகா பின்னணி பாடியிருந்தார். அப்போதுதான் இவர்களுக்குள் நட்பு மலர்ந்ததாம். இந்த நட்பு காதலாகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் காதலிப்பது நிஜம்தான் என்பதை உறுதிப்படுத்தும் சம்பவம் ஒன்றும் சமீபத்தில் நடந்திருக்கிறது. இந்தியில் ஒரு படத்தை தயாரிக்கிறார் நீது. இதில் ஒரு பாடலை மிகாதான் பாட வேண்டும் என இயக்குனரிடம் சண்டை போட்டாராம். பாடல் பதிவு உடனே நடத்த வேண்டும் என இயக்குனர் கூறியுள்ளார். அந்த நேரத்தில் மிகா மும்பையில் இல்லை. டெல்லியில¢ இருந்திருக்கிறார். படக்குழுவுடன் டெல்லிக்கே சென்றுவிட்டார் நீது. அங்கே சென்று மிகா குரலில் பாடலை பதிவு செய்தார். இந்த பாடலுக்காக நீதுவிடம் ஒரு பைசாவும் வாங்கவில்லையாம் மிகா.
Comments
Post a Comment