கோகுலம்

http://www.filmydum.com/uploads/gallery/big/1277747790gfyfuacg246446.jpg 
ஷ்ரவானந்த், பத்மப்பிரியா, பிரகதி, ஆனந்த் நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் 'அண்டரி பந்துவயா'. இந்த படம் தமிழில், 'கோகுலம்' என்ற பெயரில் வெளியாகிறது. ஒளிப்பதிவு, கிருஷ்ணன். தமிழமுதன் எழுதிய பாடல்களுக்கு அனூப் ரூபின்ஸ் இசையமைக்கிறார். சந்திர சித்தார்த் இயக்குகிறார். நயீம், ராமகிருஷ்ணா தயாரிக்கின்றனர். சாப்ட்வேர் இன்ஜினீயர் ஷ்ரவானந்த், கிராம வாழ்க்கை மிகச் சிறந்தது என்கிறார். நகர வாழ்க்கை சிறப்பானது என்கிறார் பத்மப்பிரியா. ஒருமுறை கிராமத்துக்கு வரும் அவர், அங்கு வெள்ளந்தி மனிதர்கள் காட்டிய பாசத்தால் நெகிழ்ந்து, தன் மனதை மாற்றிக்கொள்கிறார். பிறகு என்ன செய்கிறார் என்பது கிளைமாக்ஸ்.

Comments

Most Recent