வாரிசுகள் ரெடி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளின் வாரிசுகள் பலர் புகழ் பெற்றுள்ளனர். புகழை அள்ள சிலர் படையெடுத்தும் வர தயாராகிவிட்டனர். இதில் ராதாவின் மகள் கார்த்திகா கோ படத்தில் நடித்து வருகிறார். சரத்குமாரின் மகள் வரலட்சுமி போடா போடி படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க உள்ளார். விரைவில் ஷூட்டிங் தொடங்குகிறது. கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா, இந்தி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். விரைவிலேயே இவர் டைரக்ஷன் துறைக்கு வர உள்ளாராம். இவர்கள் தவிர பிரபு மகன் விக்ரம் டைரக்டராகவும் கார்த்திக் மகன் கவுதம் நடிகனாகவும் அர்ஜுன் மகள் பிரியா நடிகையாகவும் வர உள்ளனர். முரளி மகன் ஆதர்வா பாணா காத்தாடியில் நடித்து வருகிறார்.

Comments

Most Recent