சூப்பர் சிங்கர் 3

http://3.bp.blogspot.com/_Uno_emuDLJc/S6zro0P9D7I/AAAAAAAADNo/0P8OU65Jpkc/s320/Super+Singer+3.jpg
புதுச்சேரி அருகே ரூ. 25 லட்சத்தில் வீட்டைக் கொடுத்து சூப்பர் சிங்கர் ஜூனியரை முடித்த விஜய் டி.வி, இந்த முறை சூப்பர் சிங்கரின் மற்றொரு சீசனுக்காக பிரமாண்டமான பரிசுடன் காத்திருக்கிறது. சென்னை ஒரகடத்தில் உருவாகியுள்ள பிளாட்டின் மதிப்பு ரூ. 40 லட்சமாம். தமிழகத்தின் செல்ல குரலாகத் தேர்வு செய்யப்படும் நபருக்கு டபுள் பெட்ரூம் மற்றும் பிற வசதிகளுடன் இந்த பிளாட் கிடைக்கும்..


விஜய் டிவியின் வெற்றிகரமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் சீசன் 2. இந்நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்ததைத் தொடர்ந்து சூப்பர் சிங்கர் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த பனிரெண்டாம் தேதியிலிருந்து திங்கள் முதல் வியாழன் வரை இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான முறையில் உருவாக்கியுள்ளனர். இந்நிகழ்ச்சியின் நடுவர்களாக பின்னணிப் பாடகர்கள் ஸ்ரீநிவாஸ், உன்னிமேனன், சுஜாதா ஆகியோர் பங்கேற்று, சிறந்த குரல்வளம் உள்ளவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். சென்னை, கோவை மற்றும் திருச்சியில் நடைப்பெற்ற நேர்முகத் தேர்வில் ஏராளமானோர் பங்கு பெற்றதை தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கி வருகின்றனர். இந்த சீசனிலும் பல சுற்றுக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Comments

Most Recent