காமன்வெல்த் ஓட்டத்தில் நீது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'யாவரும் நலம்', 'தீராத விளையாட்டு பிள்ளை'யில் நடித்தவர் நீது சந்திரா. இவர் கூடைப் பந்து வீராங்கனை மட்டுமல்ல, கராத்தேயில் பிளாக்பெல்ட் வென்றவர். வரும் அக்டோபரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி டெல்லியில் நடக்கிறது. அதையொட்டி பாட்னாவில் விளையாட்டு வீரர்கள், தீப்பந்தம் ஏந்தி ஓடும் நிகழ்ச்சி நடந்தது. பாட்னா, நீது பிறந்து வளர்ந்த இடம். இங்கு நடந்த இந்த ஓட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. வீரர்களுடன் நீதுவும் தீப¢பந்தம் ஏந்தி ஓடினார். 'இது எனக்கு கிடைத்த பெரிய கவுரவம். என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளது. இந்த வாய்ப்பு எனக்கு மாறுபட்ட ஒரு உயரத்தை தந்தி ருக்கிறது' என சந்தோம் அடைகிறார் நீது சந்திரா.

Comments

Most Recent