தேனி பெண்ணாக மாற வசுந்தராவுக்கு பயிற்சி

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-1359.jpg
சென்னை : வசுந்தராவை தேனி பெண்ணாக மாற்ற, தனி பயிற்சி கொடுக்கப்பட்டது என்று 'தென்மேற்கு பருவ காற்று' பட இயக்குனர் சீனு ராமசாமி கூறினார். நிருபர்களிடம் மேலும் அவர் கூறியதாவது: தேனி, கம்பம், பெரியகுளம் பகுதி மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது தென்மேற்கு பருவக்காற்று. அதனால்தான் படத்துக்கு அந்தப் பெயர். இருபக்கமும் மாறி மாறி வீசும் சிறப்பு தன்மையும் அதற்கு உண்டு. இந்த பகுதி மக்களின் வாழ்கையையும், கலாசாரத்தையும் சொல்லும் படமாக இது உருவாகி வருகிறது. கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற சேது நாயகனாக அறிமுகமாகிறார். 'பேராண்மை' படத்தில் துப்பாக்கி பிடித்த வசுந்தரா, இதில் தேனிப் பெண்ணாக நடித்திருக்கிறார். மாடர்ன் பெண்ணான வசுந்தராவை சுமார் ஒரு மாதம் நடிப்பு பயிற்சி கொடுத்து தேனி பெண்ணாக மாற்றினோம். அவரது நிறமும், குரலும் தேனிப் பெண்ணுக்கு பொருத்தமாக இருந்ததால் பயிற்சியும் எளிதாக இருந்தது. இந்த படம் வசுந்தராவுக்கு விருதுகளை பெற்றுத் தரும் என்று நம்புகிறோம். ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்துவிட்டோம். முழு படப்பிடிப்பும் கோடை வெயிலில் நடத்தப்பட்டது. இவ்வாறு சீனு ராமசாமி கூறினார்.

Comments

Most Recent