நடிகை, தயாரிப்பாளர் தவிர ஸ்ரீதேவிக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அவர் ஓவியரும் கூட. இது பலருக்கு தெரியாது. ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் ...
நடிகை, தயாரிப்பாளர் தவிர ஸ்ரீதேவிக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அவர் ஓவியரும் கூட. இது பலருக்கு தெரியாது. ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் 'வான்டட் என்ற படத்தை தயாரித்தபோது அதில் சல்மான் கான் ஹீரோவாக நடித்தார். அவருக்கு தானே வரைந்த அழகான ஓவியத்தை பரிசளித்தார் ஸ்ரீதேவி. சல்மான் கானும் ஓவியம் வரைவதில் திறமையானவர். பதிலுக்கு அவரும் ஓவியம் பரிசளித்தார்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பே ஸ்ரீதேவி ஓவியங்கள் வரைவார். நடிப்பு பின் குடும்பம் என பிசியாக இருந்ததால் ஓவியத்தில் கவனம் செலுத்தாமல் இருந்தார். அவரை மறுபடியும் ஓவியம் வரைய தூண்டியது சல்மான் கான்தானாம். மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகையான ஸ்ரீதேவி, சமீபத்தில் மைக்கேலின் நினைவாக ஒரு ஓவியம் வரைந்துள்ளாராம். சீக்கிரமே ஓவிய கண்காட்சி நடத்தவும் திட்டமிட்டுள்ளாராம்.
Comments
Post a Comment