ஷாப்பிங் காம்ப்ளக்சில் திருடிய நடிகை! மலேசியாவில் பரபரப்பு!!

http://www.cuti.com.my/Sub/Kl/shopping/jalanbb/kuala_lumpur_berjaya_times_square2.jpg
பிரகாசமான வில்லன் நடிகரின் மாஜி மனைவி சமீபத்தில் மலேசியா சென்றிருந்ததாகவும், அங்குள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் சென்றபோது சில பொருட்களை திருடி மாட்டிக் கொண்டதாகவும் பரபரப்பு செய்தியொன்று கோடம்பாக்கத்தை வலம் வந்து கொண்டிருக்கிறது. பிரகாசமான வில்லன் நடிகரும், மாஜி நடிகையும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். சமீபத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பரஸ்பர விவாகரத்து செய்து கொண்டனர். மனைவியை விவாகரத்து செய்த பிரகாச நடிகர், பிரபல பாலிவுட் நடன இயக்குனரை லவ்விக் கொண்டிருக்கிறார். விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.

இதற்கிடையில் சமீபத்தில் பிரகாசத்தின் முன்னாள் மனைவி மலேசியா சென்றிருக்கிறார். அவர் அங்குள்ள ஒரு பிரபல ஷாப்பிங் காம்ப்ளக்சில் பர்சேஸ் செய்து கொண்டிருந்தபோது, சில பில் போடாத பொருட்களும் எப்படியோ அவரது பேக்கில் வந்து சேர்ந்து கொள்ள, கையும் களவுமாக பிடித்து வைத்துக் கொண்டது நிர்வாகம். மாஜி நடிகைக்கு திருட்டு பட்டம் கட்டியதுடன், விஷயம் போலீஸ் வரைக்கும் போக, செய்வதறியாமல் திகைத்த அவர் உடனடியாக பிரகாச நடிகரை தொடர்பு கொண்டிருக்கிறார். எதிர்முனையில் இருந்து வந்த கதறல் குரலை எந்தவித ரீயாக்ஷனும் இல்லாமல் கேட்டுக் கொண்ட பிரகாசம், அப்படியே போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டாராம். பிறகு எப்படியோ தமிழ்நாட்டின் முக்கிய புள்ளிகள் சிலருக்கு தகவல் வந்து அவர்கள் மாஜி நடிகையை காப்பாற்றியிருக்கிறார்கள்.

Comments

Most Recent