'வானம்' படத்தில் சிம்புவுடன் நடிக்கிறார் பரத்.தெலுங்கில் அல்லு அர்ஜுன், மனோஜ், அனுஷ்கா நடித்து ஹிட்டான படம் 'வேதம்'. இந்தப...
'வானம்' படத்தில் சிம்புவுடன் நடிக்கிறார் பரத்.தெலுங்கில் அல்லு அர்ஜுன், மனோஜ், அனுஷ்கா நடித்து ஹிட்டான படம் 'வேதம்'. இந்தப் படம் 'வானம்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகிறது. சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். மற்றொரு ஹீரோ வேடத்தில் தெலுங்கில் நடித்த மனோஜ் நடிப்பார் என்று கூறப்பட்டது.
அவர் விபத்தில் சிக்கியதால் மூன்று மாதம் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.இதையடுத்து அந்த கேரக்டரில் பரத் நடிக்கிறார். தெலுங்கில் 'வேதம்' படத்தை இயக்கிய கிருஷ் இயக்குகிறார். நான்கு வெவ்வேறு கதைகள், கிளைமாக்ஸில் ஒன்று சேரும் விதமாக இந்த படம் இருக்கும். இதற்கிடையே தனது பெயரை எஸ்.டி.ஆர் என்று மாற்றியுள்ளதாக சிம்பு தெரிவித்தார்.

Comments
Post a Comment