கவர்ச்சியை நம்பி பயன் எதுவும் இல்லை :அனுஷ்கா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கவர்ச்சியை நம்பி பயன் எதுவும் இல்லை. சினிமாவில் நிலைக்க நடிப்பு அவசியம் என்கிறார் அனுஷ்கா. இது பற்றி அவர் கூறியது: 'வேதம்' தெலுங்கு படத்தால் நல்ல பெயர் கிடைத்தது. அதில் பாலியல் தொழிலாளியாக கவர்ச்சியாக நடித்தீர்களே எனக் கேட்கிறார்கள். எனது மனதுக்கு எது நல்லது என படுகிறதோ அதை செய்கிறேன். வெறும் கவர்ச்சியாக நடித்திருந்தால் எனக்கு பெயர் கிடைத்திருக்காது. அதில் நடிப்பை வெளிப்படுத்தவும் வாய்ப்பு இருந்தது. அதனால்தான் என் கேரக்டர் பேசப்பட்டது. வெறும் கவர்ச்சியை நம்பினால் சினிமாவில் நிலைக்க முடியாது. அதை நன்றாக புரிந்து கொண்டேன். அதே நேரம் ஒரு பாடலுக்கு ஆடுவது தவறில்லை. அதில் கவர்ச்சி அதிகம் காட்டாமல்தான் நடனம் ஆடுகிறேன். ஐஸ்வர்யா ராய் எத்தனையோ பாடல்களில் நடித்திருந்தாலும் 'கஜ்ராரே' என்ற பாடல்தான் இன்றளவும் ரசிகர்களுக்கு நினைவில் நிற்கிறது. அது அவர் நடித்த படத்தில் இடம்பெறவில்லை. 'பன்ட்டி அவுர் பப்லி'யில் ஒரு பாடலுக்கு அவர் ஆடினார். அதில் இடம் பெற்ற பாடல் அது. எனவே ஒரு பாடலுக்கு ஆடுவதை கேவலமாக நினைக்கக் கூடாது.

Comments

Most Recent