உதவி இயக்குனர் ஆனார் அக்ஷராஹாசன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி, இந்தியில் 'லக்' படத்தில் அறிமுகம் ஆனார். அடுத்து தெலுங்கில் சித்தார்த் ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார். தமிழில் சூர்யாவுடன் '7ஆவது அறிவு' படத்தில் நடித்து வருகிறார். நடித்தபடி இசையிலும் கவனம் செலுத்தி வருகிறார். தனது இசைக் குழு மூலம் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் ஸ்ருதி, பாடல் ஆல்பங்களை வெளியிடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். இப்போது அவரது தங்கை அக்ஷராவும் சினிமா துறையில் நுழைந்துவிட்டார். கமல்ஹாசன் நடித்த 'உன்னைப் போல் ஒருவன்' படத்தின் விளம்பர பாடல் படமாக்குவதில் அக்ஷராவும் பணிபுரிந்து இருந்தார். அவருக்கு நடிப்பைவிட டைரக்ஷன் மீது ஆர்வம் அதிகமாம். இந்தி இயக்குனர் ராகுல் தோல்கியாவிடம் உதவியாளராக சேர்ந்துள்ளார் அக்ஷரா. குஜராத் கலவரத்தை பின்னணியாகக் கொண்டு ராகுல் இயக்கிய 'பர்சானியா' படம் தேசிய விருதை பெற்றது. சமீபத்தில் வெளியான 'லம்ஹா' படத்தை அவர் இயக்கினார். அடுத்து 'சொஸைட்டி' என்ற படத்தை அவர் இயக்குகிறார். இதில்தான் அக்ஷரா பணியாற்றுகிறார். இதில் ஹீரோயினாக நடிப்பது, சரிகா.

Comments

Most Recent