யானையால் வந்தது வினை : த்ரிஷா படத்துக்கு திடீர் தடை

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-1442.jpg
அனுமதியின்றி யானையை பயன்படுத்தியதால் த்ரிஷா நடித்த இந்தி படத்துக்கு விலங்குகள் நல வாரியம் திடீர் தடை விதித்துள்ளது.இந்தியில் த்ரிஷா அறிமுகமாகும் படம் ‘கட்டா மிட்டா’. இதில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தை பார்த்த சென்ஸார் போர்டு, காட்சிகள் எதையும் வெட¢டாமல் யூ சான்றிதழ் அளித்தது. இதையடுத்து இப்படம் நாளை திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் படத்தில் யானை ஒன்றை பயன்படுத்தி இருப்பதாக விலங்குகள் நல வாரியத்துக்கு தகவல் கிடைத்தது. திரைப்படங்களில் விலங்குகளை பயன்படுத்தும்போது கொடுமைபடுத்துவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் இனி விலங்குகள் நல வாரியத்திடம் தடையில்லா சான்ற¤தழ் பெற வேண்டும், வாரியத்தின் உறுப்பினர் முன்னிலையில் விலங்குகளை பயன¢படுத்தும் காட்சியை படமாக்க வேண்டும் என திரைத்துறைக்கு வாரியம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் இதை ‘கட்டா மிட்டா’ பட தயாரிப்பாளரான அக்ஷய் குமார், இயக்குனர் பிரியதர்ஷன் பின்பற்றவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து விலங்குகள் நல வாரியம் இப்படத்தை பார்த்தது. படத்தில் புல்டோசர் ஒன்றை யானை தள்ளுவது போல காட்சி இடம்பெறுகிறதாம். அனுமதியின்றி யானையை பயன்படுத்தியதால் படத்தை திரையிட அனுமதிக்க முடியாது என விலங்குகள் நல வாரியம் தெரிவித்தது.இதுபற்றி பிரியதர்ஷன் கூறுகையில், ‘‘சிறு படங்களில் விலங்குகளை பயன்படுத்தும்போது இது போல பிரச்னை வருவதில்லை. பெரிய படங்களுக்குதான் எல்லாமே பிரச்னை ஆகிறது. யானையை கொடுமைபடுத்தவில்லை என அதன் பாகன் மூலம் விளக்கம் அளித்துவிட்டோம். அந்த காட்சியை நீக்கவும் தயார் என கூறிவிட்டோம். இதனால் படத்துக்கு தடை நீங்கும் என்று உறுதியாக நம்புகிறோம். திட்டமிட்டபடி நாளை ரிலீஸ் செய்வோம்’’ என்றார்.

Comments

Most Recent