அறிமுக நடிகை அலட்டாமல் கொடுத்த லிப் டூ லிப்!

http://img1.dinamalar.com/cini//CNewsImages/Thumb/2351Nellu_T.jpg
அறிமுக நடிகையொருவர் எந்தவித அலட்டலும் இல்லாமல் லிப் டூ லிப் கிஸ் கொடுக்கும் காட்சியில் நடித்துள்ளார். பாப்புலரான நடிகைகளே உதட்‌டோடு உதடு பதிக்கும் முத்தக்காட்சிகளில் நடிக்க தயக்கம் காட்டுவார்கள். அறிமுக நாயகிகளை சொல்லவே வேண்டாம். முத்தக்காட்சி என்றதும் அலறியடித்து ஓட்டம் பிடித்த புதுமுகங்கள், முத்தக்காட்சியில் நடித்து முடித்து விட்டு கண்ணீர் வடித்த புதுமுகங்கள் என எத்தனையோ புதுமுகங்களை பார்த்த தமிழ் சினிமாவுக்கு பாக்யாஞ்சலி கொஞ்சம் வித்தியாசமானவராகவே தெரிகிறாராம். முத்தக்‌காட்சி என்றதும் முதலில் முகத்தை மூடிய அஞ்சலி, காட்சியின் முக்கியத்துவத்தை சொன்னதும் ஓ.கே. சொல்லி விட்டாராம்.

டைரக்டர் எம்.சிவசங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் நெல்லு படத்தின் நாயகியாக பாக்யாஞ்சலி நடிக்கிறார். கேரளத்து புதுவரவான அவருக்கு ஜோடியாக, படத்தின் நாயகனாக வாசுகி படத்தில் அறிமுகமான சத்யா நடிக்கிறார். அறிமுக நடிகையாக இருந்தால் கசக்கி பிழியலாம் (நடிப்பில்தான்) என்ற அறிவிக்கப்படாத கோடம்பாக்க சட்டத்திற்கு பாக்யாஞ்சலி மட்டும் விதிவிலக்கா என்ன?. தகதகக்கும் தங்க மங்கையாக மின்னிய அவரை கிராமத்து பெண்ணாக, அதுவும் விவசாயம் செய்யும் பெண்ணாக மாற்றுவதற்காக பலமணி நேரம் வெயிலில் நிற்க வைத்து விட்டாராம் டைரக்டர். நாயகியின் வாயில் மென்ற வெற்றிலையை நாயகன் கவ்வி எடுக்கும் காட்சியிலும், அதனைத் தொடர்ந்து வரும் லிப் டூ லிப் முத்தக்காட்சியிலும் எந்தவித தயக்கமும், அலட்டலும் இல்லாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார் பாக்யாஞ்சலி.

ஐம்பது வருடங்களுக்கு முன் நடந்த உண்மை சம்பவத்தை படமாக்கி வரும் டைரக்டர் சிவசங்கர், கதையில் இருக்கும் வலி நிறைந்த உண்மை காதலை வெளிப்படுத்துவதற்காக இப்படியொரு காட்சியை சேர்த்திருக்கிறாராம்.

Comments

Most Recent