பிரகாஷ்ராஜின் டூயட் பிலிம்சில் 'மொழி', 'அபியும் நானும்', 'வெள்ளித்திரை' படங்களில் நடித்தார் பிருத்விராஜ். 'மொழ...
பிரகாஷ்ராஜின் டூயட் பிலிம்சில் 'மொழி', 'அபியும் நானும்', 'வெள்ளித்திரை' படங்களில் நடித்தார் பிருத்விராஜ். 'மொழி'யில் நடிக்கும்போதே பிரகாஷ்ராஜ், பிருத்விராஜ் இடையே வலுவான நட்பு ஏற்பட்டது. ஷூட்டிங் இல்லாத நேரத்திலும் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக் கொள்வார்கள். 'பிரகாஷ்ராஜை போல நல்ல படங்களை தயாரிக்க ஆசை உள்ளது' என அப்போதே தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார் பிருத்வி. அது இப்போது நிறைவேறியுள்ளது. மலையாளத்தில் 'உருமி' என்ற படத்தை சந்தோஷ் சிவன் இயக்குகிறார். சந்தோஷ் சிவனுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார் பிருத்வி. பட நிறுவனத்துக்கு ஆகஸ்ட் சினிமா என பெயரிட்டுள்ளார். 'பட தயாரிப்பில் ஈடுபட பிரகாஷ் ராஜ் தந்த உந்துதல் முக்கிய காரணம். அதே நேரம், அவரிடம் நிறைய அட்வைசையும் பிருத்வி பெற்றார்' என்கிறது 'உருமி' பட வட்டாரம்.
Comments
Post a Comment