'பாய்ஸ்Õ பட ஹீரோ சித்தார்த், Ôஆய்த எழுத்துÕ படத்தில் நடித்தார். பின் தெலுங்கு, இந்திக்கு போனவர் சில வருடங்கள் கழித்து இப்போதுதான் தமிழ...
'பாய்ஸ்Õ பட ஹீரோ சித்தார்த், Ôஆய்த எழுத்துÕ படத்தில் நடித்தார். பின் தெலுங்கு, இந்திக்கு போனவர் சில வருடங்கள் கழித்து இப்போதுதான் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டுகிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் '180Õ என்ற படத்தில் அவர் நடிக்கிறார். இந்நிலையில் அவர் புதிய பாதைக்கு மாற முடிவு செய்திருக்கிறார். சிறுவயதிலேயே கர்நாடக இசையை முறைப்படி கற்றுக்கொண்டாராம். கல்லூரி நாட்களிலும் இசையை மறக்காமல் சக நண்பர்களுடன் சேர்ந்து மியூசிக் பேண்ட் அமைத்திருந்தார். இப்போது புதிதாக ஒரு இசை குழுவை உருவாக்கி இருப்பதுடன் படங்களுக்கு இசை அமைக்கவும் முடிவு செய்திருக்கிறார். சொந்தமாக ஒலிப்பதிவு ஸ்டுடியோ அமைத்துள்ள சித்தார்த், அங்கு தனிமையில் அமர்ந்து டிரம்ஸ், கீ போர்டு என சகலத்தையும் வாசித்து தள்ளுகிறார்.
'சினிமாவில் இசை அமைக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. ஒரு நடிகராக எனது பணியில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியுள்ளது. பார்த்த முகத்தையே பார்க்க வேண்டியும் உள்ளது. இதெல்லாம் சலித்துவிட்டது. என்னுடைய எண்ணங்களை பிரதிபலிக்க ஒரு துறையாக இசையை தேர்வு செய்துள்ளேன். இசை துறையில் சாதிப்பேன்Õ என்கிறார் சித்தார்த்.
Comments
Post a Comment