ஊலலலா பாடல் வெளியீடு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஏக சக்ரா மீடியா நிறுவனம் சார்பில் டி.கலைசெல்வம் தயாரிக்கும் படம் 'ஊலலலா'. ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா இயக்கி, ஹீரோவாக நடிக்கிறார். ப்ரீத்தி பண்டாரி ஹீரோயின். இதன் பாடல் வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் நேற்று நடந்தது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் பாடல்களை வெளியிட்டார். விழாவில் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் முரளிதரன், பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், கே.ஆர், தரணி, பேரரசு, தயாரிப்பாளர்கள் ஹென்றி, சேலம் சந்திரசேகரன், சிவா, சுவாமிநாதன், ஏ.எம்.ரத்தினம், நடிகர்கள் ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, பட்டிமன்றம் ராஜா, சிட்டிபாபு, நடிகைள் கீர்த்தி சாவ்லா, ப்ரீத்தி பண்டாரி, இசை அமைப்பாளர் சேகர் சந்திரா, குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தயாரிப்பாளர் கலைசெல்வம் வரவேற்றார். முடிவில், இயக்குனர் ஜோதி கிருஷ்ணா நன்றி கூறினார்.

Comments

Most Recent