டோனிக்கு முதல் வாழ்த்து சொன்னவள் - லட்சுமிராய்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifDm-RZJjCemI3pRRIHS7hPsobMod9RvWlqXxRaA4GRp-03tyQ95iSf1nknq5jKITzsoPLpGOKFV8ye3B2PxVkRR47Nojs7O_VFbhR8qJTP8t8hEPJ9g5hqGRPFXjVlTEMcVylT34dlPs/s1600/lakshmi+rai.jpg

பாலிவுட்டின் ரியாலிட்டி ஷோவுக்காக ராணி முகர்ஜியுடன் மோதல், டோனியின் திருமணம் குறித்த பேட்டிகள், மும்பை தாஜ் ஹோட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதம் என கடந்த வாரங்களில் சென்சேஷனல் நியூஸ் மேக்கர் லட்சுமிராய்தான்.

அசின், நயன்தாரா வரிசையில் உங்களையும் பிரச்னைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறதே?

பிரச்னைகள், சர்ச்சைகள் எல்லாம் நடிகைக்கு ரொம்ப சாதாரணமானது. அதைப் பற்றியெல்லாம் வருத்தப்பட்டால் நிம்மதி போய்விடும். சில வதந்திகளுக்கு மீடியாக்களும் துணை நிற்கின்றன. பாலிவுட், கோலிவுட் என அனைத்திலும் மீடியாக்கள் வதந்திகளை பெரிதுப்படுத்தி பேசி வருகின்றன. எல்லா மனிதர்களுக்கும் பிரச்னைகள் இருக்கின்றன. பிரச்னைகள் இல்லாத மனிதன் எங்கேயாவது இருப்பானா? நான் எப்போதும் மீடியாக்களின் வெளிச்சத்தில் இருப்பதால், நான் சார்ந்த பிரச்னைகள் இன்னும் பெரிதாகி விடுகின்றன. எல்லோருக்கும் வாழ்க்கை இருக்கிறது. நடிகைகளின் வாழ்க்கை கொஞ்சம் வித்தியாசமானது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். அசின், நயன்தாரா பற்றி பேச விரும்பவில்லை.
டி.வி.ஷோ, ஒரே ஒரு பாடலுக்கு நடனம், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லாத கேரக்டர் என எல்லா சென்டர்களிலும் பார்க்க முடிகிறதே?

மக்களுக்கு ஈஸியா ரீச் ஆகும் ஒரு சென்டர் சினிமா. அதை ஓரிடத்தில் வைத்து சுருக்கி விட முடியாது. ஸ்கூல் படிக்கிற சிறுவனிலிருந்து, ரீடெய்ர்ட் ஆன பெரியவர்கள் வரை கவர்ந்து இழுக்கிற சக்தி சினிமாவுக்கு மட்டும்தான் இருக்கிறது. கௌபாய் முதல் விஞ்ஞானம் பேசும் படம் வரைக்கும் ரசிக்கப்படுகிறது. நான் இதுவாகத்தான் நடிப்பேன் என்றால் காணாமல் போய் விடுவோம். எந்த கேரக்டரையும் செய்கிறேன் என்பதால்தான் இன்னும் இருக்கிறேன். நடிப்பவர்கள் தனது எல்லைகளை சுருக்கிக் கொண்டால் சினிமாவும் சுருங்கிக் கொள்ளும். சினிமாவுக்கு முன் டி.வி.ஷோக்களில்தான் ஆர்வம் இருந்தது. அதனால்தான் இப்போதும் டி.வி.ஷோவை விடாமல் வைத்திருக்கிறேன்.

ஹிந்தியில் நீங்கள் நடிக்கும் சினிமா பாதியில் நின்றுவிட்டதாக செய்திகள் வருகிறதே?

இப்படியும் வதந்தி இருக்கிறதா? ஹிந்தியில் நான் நடிக்கவிருந்த படம் இன்னும் தொடங்கப்படவில்லை. அதற்குள் இப்படி செய்தியா? இதற்கெல்லாம் யார் காரணம் எனத் தெரியவில்லை. யாரையும் குற்றம்சாட்டி பேசவும் நேரமில்லை. ஹிந்தி சினிமா வரும் மாதத்தில்தான் தொடங்கப்படுகிறது. ஹீரோ உள்ளிட்ட நட்சத்திரங்களின் தேர்வு நடந்து வருகிறது. இன்னும் சில நாள்களில் அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரியவரும். இந்த மாதிரியான செய்திகளை மீடியாக்கள் பெரிதுப்படுத்த வேண்டாம்.


டோனியின் திருமணம் பற்றி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தெரியும் என சொல்லி இருக்கிறீர்களே?

டோனி எனக்கு நல்ல நண்பர் எனச் சொன்ன போது யார் நம்பினார்கள்? மீடியாக்கள் சப்போர்ட் அந்த செய்தியை வேறு மாதிரி ஆக்கி விட்டது. போகிற இடமெல்லாம் டோனி பற்றித்தான் பேசினார்கள். என்னை விசாரித்ததை விட டோனி பற்றி

விசாரித்தவர்கள்தான் அதிகம். இப்போது அந்த செய்திகள் எந்த அளவுக்கு பொய் என எல்லோருக்கும் தெரிந்து விட்டது. டோனி, சாக்ஷியைத்தான் திருமணம்

செய்யப் போகிறார் என்பது முன்னரே தெரியும். அது பற்றி அவர் என்னிடம்

பேசியிருக்கிறார். இந்த விஷயத்தில் டோனிக்கு வாழ்த்து சொன்ன முதல் நபர் நான்தான்.

ரியாலிட்டி ஷோவுக்காக ராணி முகர்ஜியுடன் மோதலாமே?

அந்த ரியாலிட்டி ஷோ பற்றியும், ராணி முகர்ஜிதான் அந்த ஷோவை வழங்குகிறார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கான பேச்சுவார்த்தை என்னிடம் நடந்தது உண்மை. ராணி முகர்ஜிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்ததால் அந்த ஷோவில் இருந்து விலகி விட்டார் என பின்னர் தெரிந்துக் கொண்டேன். ராணி முகர்ஜி சீனியர். அவருடன் மோதும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை.

Comments

Most Recent