கமலுடன் நடிக்க முடியாத கவலையில் த்ரிஷா!

http://www.southdreamz.com/wp-content/uploads/2010/02/trisha-kamal.jpg
உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கும் மன்மதன் அம்பு படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் சங்கீதாதானாம். த்ரிஷா மாதவனுக்குத்தான் ஜோடியாக நடிக்கிறார் என்கிறார்கள். கமல் சங்கீதா ஜோடிக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு. அவர்களுக்கும் படத்தில் முக்கியப்பங்கு இருக்கிறதாம். கமல் படத்தில் நடிக்கும் ஆசை நிறைவேறினாலும் அவருக்கு ஜோடியாக நடிக்க முடியாத வருத்தத்தில் இருக்கிறாராம் த்ரிஷா. பாலுமகேந்திராவின் சதிலீலாவதி படம் போல் இந்தப்படமும் நகைச்சுவை வகையைச் சார்ந்ததாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.

Comments

Most Recent