முத்தக் காட்சியால் இயக்குனர்-ஹீரோயின் மோதல்

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-1350.jpg
அறிமுக இயக்குனர் ரெமோ ஷிவா இயக்கும் படம், 'கல்லூரி காலங்கள்'. புதுமுகங்கள் சுகுமார், பிரியங்கா சந்திரா ஜோடியாக நடிக்கின்றனர். கதைப்படி, ஒரு காட்சியில் ஹீரோ, ஹீரோயின்கள் உதட்டோடு உதடு இணைத்து முத்தமிட வேண்டும். முதலில் தயங்கிய பிரியங்கா சந்திரா, காட்சியின் முக்கியத்துவத்தை இயக்குனர் சொன்ன பிறகு சம்மதித்தார். ஆனால் காட்சி சரியாக வராமல், 15 டேக் வாங்கியது. அதன் பிறகே காட்சி ஒ.கே ஆனது. காட்சி படமானபோது இயக்குனர், ஒளிப்பதிவாளர் மட்டுமே ஸ்பாட்டில் இருந்தனர். ஆனால் இந்த தகவல் வெளியே பரவியது. இதற்கு இயக்குனர்தான் காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் பிரியங்கா கோபம் அடைந்தார். 'எப்படி இந்த விஷயத்தை வெளியில் சொல்லலாம்' என்று டைரக்டரிடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆவேசமாக பேசினார் பிரியங்கா. டைரக்டரும் பதிலுக்கு பேச வாக்குவாதம் முற்றியது. இதனால் ஷூட்டிங் தடைபட்டது. யூனிட்டில் இருந்தவர்கள் வந்து இருவரையும் சமாதானப்படுத்தினர். இதையடுத்து ஷூட்டிங் தொடர்ந்தது. ஆனாலும் பிரியங்கா சரியாக ஒத்துழைக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மீண்டும் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாகவும் தயாரிப்பாளர் வந்து சமாதானம் செய்து வைத்ததாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

Comments

Most Recent