தெலுங்கில் வெளியான 'வேதம்' பட ரீமேக்கில் நடிக்கிறார் சிம்பு. இப்படத்துக்கு 'வானம்' என தலைப்பிட்டுள்ளனர். தெலுங்கில் இயக்கி...
தெலுங்கில் வெளியான 'வேதம்' பட ரீமேக்கில் நடிக்கிறார் சிம்பு. இப்படத்துக்கு 'வானம்' என தலைப்பிட்டுள்ளனர். தெலுங்கில் இயக்கிய கிரீஷ், தமிழ் ரீமேக்கையும் இயக்குகிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்த வேடத்தில் சிம்பு நடிக்கிறார். மோகன்பாபுவின் மகன் மனோஜ் நடித்த வேடத்துக்கு அவரையே தேர்வு செய்திருந்தனர். சிம்பு தனது நண்பர் என்பதால் இதில் நடிக்க மனோஜ் சம்மதித்திருந்தார். திடீரென இப்போது படத்திலிருந்து விலகியுள்ளார். இது பற்றி மனோஜ் கூறும்போது, ''ஒரு விபத்தில் தோளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று மாதங்கள் ஓய்வில் இருக்க டாக¢டர்கள் கூறியுள்ளனர். அதனால் 'வானம்' படத்தில் நடிக்கவில்லை'' என்றார்.
Comments
Post a Comment