பருத்தி வீரன் வழக்கு-அமீர் தொடர்ந்த மனு தள்ளுபடி

 http://thatstamil.oneindia.in/img/2010/07/08-paruthi-veeran2-200.jpg

பருத்தி வீரன் படத் தயாரிப்பாளர் மீது இயக்குநர் அமீர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடியாகி விட்டது.

பருத்தி வீரன்தொடர்பாக இயக்குநர் அமீருக்கும், அதன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே பெரும் பிரச்சினை உருவானது. தன்னை ஞானவேல்ராஜா மோசடி செய்து விட்டதாக புகார் கூறினார் அமீர்.

இந்த நிலையில், படத்தின் தெலுங்கு, கன்னட உரிமையை விற்பதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தை அணுகினார். இதுகுறித்து பதில் மனுதாக்கல்செய்ய நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், அக்பர் அலி உத்தரவி்ட்டிருந்தனர்.

அப்போது ஞானவேல்ராஜா தரப்பில் வாதிடுகையில், அமீர் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ரூ.50 லட்சத்துக்கான சொத்து ஆவணத்தை அளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி சொத்து ஆவணம் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. எனவே அமீரின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது.

இதைப் பரிசீலித்த நீதிபதிகள், அமீரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Comments

Most Recent