கிராம மக்களுக்கு இடையே ஏற்படும் போட்டியில் இரு குரூப் பிரிகிறது. இதில் யார் டாப் என்பதை காட்டுவதற்காக கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அதற்கு...
கிராம மக்களுக்கு இடையே ஏற்படும் போட்டியில் இரு குரூப் பிரிகிறது. இதில் யார் டாப் என்பதை காட்டுவதற்காக கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அதற்கு வலுக்கட்டாயமாக கடத்தி வந்து பயிற்சியாளராக நியமிக்கப்படுகிறார் சடகோபன் ரமேஷ். இதுதான் பட்டா பட்டியின் கதை. இப்படத்தின் டிரெய்லரை கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வெளியிட்டு பேசும்போது, இந்திய அணிக்காக விளையாடிய சடகோபன் ரமேஷ், இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். சினிமா துறைக்கு அடியெடுத்து வைத்திருக்கும் ரமேஷ் இதில் வெற்றி பெற்று பிரபல நடிகனாக வர வேண்டும். அதே நேரம், கிரிக்கெட் விளையாட்டின்போது ரமேஷ் அதிகம் துள்ளுவான். கோபமோ சந்தோஷமோ தனது உணர்வுகளை உடனுக்குடன் வெளிப்படுத்துவான். அதுபோல் சினிமாவில் துள்ளாமல் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்றார் ஸ்ரீகாந்த்.
Comments
Post a Comment