இலங்கையில் நடிகை அசின் தங்கியிருந்த ஓட்டலில் இந்திய கிரிக்கெட் அணி கேப¢டன் டோனியும் தங்கியிருந்தார். அங்கு டோனியை சந்தித்து பேசினார் அசின்...
இலங்கையில் நடிகை அசின் தங்கியிருந்த ஓட்டலில் இந்திய கிரிக்கெட் அணி கேப¢டன் டோனியும் தங்கியிருந்தார். அங்கு டோனியை சந்தித்து பேசினார் அசின். விளம்பர படம் ஒன்றில் டோனியுடன் சேர்ந்து நடித்தார் அசின். அப்போது இருவருக்கும் நட்பு மலர்ந்தது. மும்பையில் உள்ள அசின் வீட்டுக்கு டோனி அடிக்கடி சென்று வந்தார். இதற்கிடையே டோனிக்கு அவரது பள்ளி தோழி சாக்ஷியுடன் திடீர் திருமணம் நடந்தது. இதற்கு அசினுடன் டோனிக்கு ஏற்பட்ட நெருக்கமும் காரணம் என கூறப்பட்டது. இதுபற்றி அசினிடம் கேட்டபோது, 'டோனி எனது நண்பர்தான். அவருடன் காதல் இல்லை. அவர் சாக்ஷியை காதலிப்பது ஏற்கனவே எனக்கு தெரியும்' என்றார்.
சமீபத்தில் 'ரெடி' இந்தி படத்தின் ஷூட்டிங்குக்காக அசின் இலங்கை சென்றார். கொழும்பில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கியிருந்தார். இந்தியா& இலங்கை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட இந்திய அணியும் கடந்த வாரம் இலங்கை சென்றது. அசின் தங்கியிருந்த அதே நட்சத்திர ஓட்டலில் டோனியும் தங்கியுள்ளார். அப்போது இருவரும் சந்தித்து பேசினர். இதுபற்றி அசின் கூறியதாவது: இலங்கையில் இருந்து நேற்று முன்தினம் மும்பைக்கு வந்தேன். நான் தங்கியிருந்த ஓட்டலில் டோனியும் தங்கியிருந்தார். நாங்கள் நண்பர்கள். அவரது திருமணத்துக்கு போக முடியவில்லை. அதனால் நேரில் சந்தித்து வாழ்த்தலாம் என இருந்தேன். அவரே இலங்கைக்கு வந்தது மகிழ்ச்சி அளித்தது. அவரை சந்தித்து வாழ்த்து கூறினேன். ஓட்டலில் அவர் மட்டுமல்ல, மொத்த இந்திய கிரிக்கெட் அணியும் தங்கியிருந்தது. 'ரெடி' பட ஷூட்டிங் இலங்கையில் முடிந்து விட்டது. அடுத்த கட்ட ஷூட்டிங் மும்பையில் நடக்கிறது. விஜய்யுடன் நடிக்கும், 'காவல் காதல்' பட ஷூட்டிங்கில் பங்கேற்க அடுத்த மாதம் சென்னை வருவேன். இவ்வாறு அசின் கூறினார்.
Comments
Post a Comment