பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனுக்கு சென்னையில் கிரானைட் சிலை நிறுவப்பட்டவுள்ளது. மூன்றரை டன் எடை கொண்ட கல்லில் 12 அடி உயர சிலையை செதுக்கியுள...
பாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனுக்கு சென்னையில் கிரானைட் சிலை நிறுவப்பட்டவுள்ளது.
மூன்றரை டன் எடை கொண்ட கல்லில் 12 அடி உயர சிலையை செதுக்கியுள்ளார் சென்னையைச் சேர்ந்த சந்திர சேகரன் என்பவர்.
சந்திரசேகரன் கிரானைட் தொழிலில் ஈடுபட்டுள்ளார். சொந்தமாக கிரானைட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ஜாக்சன் மீது ஈடுபாடு கொண்டவரான சந்திரசேகரனுக்கு ஜாக்சனின் மரணம் பெரும் துயரைத் தந்தது. இதையடுத்து ஜாக்சனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கிரானைட்டால் ஆன சிலையை உருவாக்கியுள்ளார்.
மேலும், லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இந்த சிலை இடம் பெறும் என நம்பிக்கையுடன் உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஜாக்சனுக்கு ஏதாவது ஒரு வகையில் அஞ்சலி செலுத்த தீர்மானித்தோம். அதன் படி இந்த சிலையை உருவாக்கியுள்ளோம். இது முழுக்க ஒரே கல்லினால் ஆன சிலையாகும் என்றார்.
45 நாட்கள் இந்த சிலையை உருவாக்க காலம் பிடித்ததாம். 24 மணி நேரம் உழைத்து சிலையை வடித்து முடித்துள்ளனர். மிகச் சிறந்த கிரானைட் சிற்பக் கலைஞர்களைக் கொண்டு இதை உருவாக்கியுள்ளனர்.
இந்த சிலையை உருவாக்க 10.2 லட்சம் செலவானதாம்.
விரைவில் கலிபோர்னியாவில் உள்ள ஜாக்சனின் நெவர்லேன்ட் வேலிக்கு இந்த சிலையை தானமாக கொடுக்கப் போகிறாராம் சந்திரசேகரன்.
Comments
Post a Comment