நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... சொல்லிட்டு அடிக்கிற படத்தை ரிலீஸ் பண்ண முடியாம தயாரிப்பு ஜகா வாங்கினாரு. அந்த படத்தை ...
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
சொல்லிட்டு அடிக்கிற படத்தை ரிலீஸ் பண்ண முடியாம தயாரிப்பு ஜகா வாங்கினாரு. அந்த படத்தை இப்போ ரிலீஸ் பண்ண இயக்கம் முயற்சி பண்றாராம்... பண்றாராம்... பைனான்சியர்களை பார்த்து பேசுறாராம்... பேசுறாராம்... பட ஹீரோகிட்ட உதவி கேட்கப்போனாராம். ஹீரோவோ நைசா பேசி,
நழுவிட்டாராம்... நழுவிட்டாராம்...
மலையாள ஹீரோக்களோடு மோதிய வில்லன் நடிகரு, தனக்கு தெரிஞ்ச தமிழ் ஹீரோக்களோடு போன்ல பேசினாராம்... பேசினாராம்... Ôமலையாள சினிமால ஒதுக்கிட்டாங்க, தமிழ்ல நடிக்க வாய்ப்பு கொடுங்கÕன்னு கேட்டாராம். Ôஇப்போதைக்கு எதுவும் இல்ல; இருந்தா சொல்றோம்Õனு ஹீரோக்கள் எஸ் ஆயிட்டாங்களாம்... ஆயிட்டாங்களாம்...
ஹீரோவா தன்னை வச்சு தானே படம் எடுக்கிறாரு கான் வில்லன். வழக்கமா நீளமான ஒரு பெயரை வச்சு, படத்தையும் ஆரம்பிச்சாரு... ஆரம்பிச்சாரு... தொடர்ந்து ஷூட்டிங் நடத்த டப்பு இல்லையாம். அதனால படத்தை அப்படியே நிறுத்தி வச்சிருக்காராம்... வச்சிருக்காராம்...
Comments
Post a Comment