ராவணன் படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டார் மணிரத்தினம். இப்படம் இந்தியில் உருவாகிறது. ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கிறார்...
ராவணன் படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டார் மணிரத்தினம். இப்படம் இந்தியில் உருவாகிறது. ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கிறார்.
மணிரத்தினம், தமிழ், இந்தி, தெலுங்கில் இயக்கிய படம் ராவணன். இந்தியில் ராவண் என்ற பெயரிலும், தமிழில் ராவணன் எனவும், தெலுங்கில் வில்லன் என்ற பெயரிலும் இப்படம் வெளியானது.
இந்தியிலும், தெலுங்கிலும் படம் தோல்வியைத் தழுவியுள்ளது. அதேசமயம், தமிழில் முதலுக்கு மோசமில்லை என்ற ரேஞ்சுக்கு தேறியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்கு கிளம்பி விட்டார் மணிரத்தினம். இப்படத்தை இந்தியில் இயக்கவுள்ளார். ரன்பீர் கபூர்தான் நாயகன். ஹீரோயின் உள்ளிட்ட பிற கலைஞர்கள் உள்ளிட்டவை குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லையாம்.
இப்படத்தை முழுக்க முழுக்க இந்தியாவின் பெருநகரங்களில் எடுக்கவுள்ளார் மணி. முக்கியக் காட்சிகள் லண்டனில் படமாக்கப்படவுள்ளன. இது ஒரு பக்கா சிட்டி சப்ஜெக்ட் என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.
முதலில் இப்படத்தை தமிழ், இந்தியில் என இரு மொழிகளில் எடுக்கத் திட்டமிட்டிருந்தாராம் மணிரத்தினம். தமிழ்ப் பதிப்பில் சிம்புவை நடிக்க வைக்கவும் யோசித்திருந்தார். ஆனால் இப்போது அதை டிராப் செய்து விட்டார். இந்தியில் மட்டும் இயக்குகிறார்.
மணிரத்தினத்தின் பல படங்களின் மெகா வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவரான பழம்பெரும் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இசை வழக்கம் போல இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.
Comments
Post a Comment