'மகிழ்ச்சி' படத்தில் வரலாற்றை சித்தரிக்கும் 100 ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிர்வு திரைப்பட்டறை சார்பில் த.மணிவண்ணன் தயாரிக...
'மகிழ்ச்சி' படத்தில் வரலாற்றை சித்தரிக்கும் 100 ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிர்வு திரைப்பட்டறை சார்பில் த.மணிவண்ணன் தயாரிக்கும் படம் 'மகிழ்ச்சி'. கவுதமன் இயக்கி நடிக்கிறார். அவருடன் சீமான், அஞ்சலி, கார்த்திகா, பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்து விட்டது. படம் பற்றி இயக்குனர் கவுதமன் கூறியதாவது: எழுத்தாளர் நீல பத்மநாபன் எழுதிய 'தலைமுறைகள்' நாவல்தான் மகிழ்ச்சி திரைப்படமாக உருவாகி உள்ளது. இதற்காக 12 ஆண்டுகள் கடுமையாக உழைத்து திரைக்கதை அமைத்தேன். இது மூன்று தலைமுறைகளை உள்ளடக்கிய கதை. இந்தக் காலத்துக்கு ஏற்ற வகையில் சண்டைகள், பாடல்கள் கொண்ட கமர்சியல் படமாகத் தயாராகியுள்ளது. இதில் காவிரி பூம்பட்டினத்தை கடல் மூழ்கடித்த வரலாற்று சம்பவம் இடம் பெறுகிறது. இது ஓவியர் மருது வரைந்த 100 ஓவியங்களைக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புதிய முயற்சி. இந்த ஓவியங்கள் பின்னர் புத்தகமாக வெளியிடப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment