‘பாய்ஸ்’, ‘ஆய்த எழுத்து’ படங்களில் நடித்தவர் சித்தார்த். இப்போது ’180′ என்ற படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். ‘இனி சோலோ ஹீரோவாகத்த...
‘பாய்ஸ்’, ‘ஆய்த எழுத்து’ படங்களில் நடித்தவர் சித்தார்த். இப்போது ’180′ என்ற படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். ‘இனி சோலோ ஹீரோவாகத்தான் நடிப்பேன்’ என்கிறார். இது பற்றி சித்தார்த் கூறியது: ‘ஆய்த எழுத்து’, எனது குருநாதர் மணிரத்னம் இயக்கிய படம் என்பதால் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடித்தேன். ‘ரங் தே பசந்தி’ படத்தில் பிளாஷ்பேக்கில் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் வேடம் எனக்கு தரப்பட்டது. அதனால் அதிலும் பல ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்தேன். இனி இரு ஹீரோ அல்லது பல ஹீரோ கதைகளில் நடிக்க மாட்டேன். கடைசியாக இந்தியில் ‘ஸ்ட்ரைக்கர்’ படத்தில் கூட சோலோ ஹீரோவாகத்தான் நடித்தேன். தெலுங்கு படங்களிலும் அதே போல் நடிக்கிறேன். அங்கு எனது படங்களும் வெற்றிகரமாக ஓடுகிறது. அதனால் தெலுங்கில் கவனம் செலுத்துகிறேன். ’180′ படத்துக்காக தொடர்ந்து முப்பது நாட்கள் இடைவிடாமல் ஐதராபாத்தில் நடிக்க உள்ளேன்.
Comments
Post a Comment