தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் நடந்தது. இதில் சங்கத்தில் உறுப்பினராக சேராத நடிகர், நடிகைகள் ஆகஸ்ட் 15ம் தேத...
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் நடந்தது. இதில் சங்கத்தில் உறுப்பினராக சேராத நடிகர், நடிகைகள் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் சேர வேண்டும். இல்லையென்றால் அவர்கள் தமிழ் சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நடிகர் சங்கத்தில் முன்னணி நடிகர், நடிகைகள் அனைவருமே உறுப்பினர்களாக உள்ளனர். அதே நேரம் தமிழ் சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும் உறுப்பினர் ஆகாத நடிகர், நடிகைகளும் பட்டியலில் உள்ளனர். அவர்கள் அனைவரும் உடனடியாக சங்கத்தில் சேர வேண்டும் என எச்சரிக்கப்பட்டனர். இதையடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் ஜெனிலியா உடனடியாக சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ளார். இதே போல் சமீரா ரெட்டியும் உறுப்பினராக சேர்ந்துவிட்டார். ஹன்சிகா மோத்வானி, நீது சந்திரா, களவாணி பட ஹீரோ விமல், ஹீரோயின் ஓவியா, அதில் வில்லனாக நடித்த திருமுருகன் உள்பட பலர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். கடந்த ஒரே வாரத்தில் 20 பேர் வரை உறுப்பினர்களாக சேர்ந்துவிட்டதாக சங்க வட்டாரங்கள்
தெரிவித்தன.
சங்கத்தில் சேராமல் இருந்த நடிகர், நடிகைகள் உடனடியாக சேருமாறு பல முறை நடிகர் சங்கம் கோரி வந்தது. இம்முறை அதிரடியாக 15ம் தேதி வரை கெடுவும் அதற்கு பின்பும் சேராமல் போனால் தடையும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. இதையடுத்துதான் உடனடியாக சங்கத்தில் நடிகர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இது பற்றி சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, தமிழ் முரசு நிருபரிடம் கூறியதாவது:15ம் தேதி வரை கெடு விதித்ததும் பல நடிகர், நடிகைகள் சங்கத்தில் சேர்ந்துவிட்டனர். இதுவரை 20க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். மேலும் பலர் இணைய உள்ளனர். சில புதுமுகங்கள் இன்னும் சேரவில்லை என கூறப்பட்டது. அனைவருக்குமே தகவல் சென்றுள்ளதால் உடனே சேர்ந்துகொள்வார்கள். சங்கத்தில் இன்னும் உறுப்பினர் ஆகாமல் உள்ள அனுஷ்காவுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அவர் உட்பட மேலும் சிலர் 15ம் தேதிக்குள் சங்கத்தில் இணைவார்கள். உறுப்பினர் ஆகாதவர்கள் மீது 15ம் தேதிக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ராதாரவி கூறினார்.
Comments
Post a Comment