ரெய்டில் சிக்கிய 2 தெலுங்கு நடிகைகள் 8/24/2010 10:08:24 AM ஐதராபாத்தில் போலீ...
8/24/2010 10:08:24 AM
ஐதராபாத்தில் போலீசார் நடத்திய ரெய்டில் தெலுங்கு நடிகைகள் 2 பேர் உட்பட 7 பேர் சிக்கினர். ஐதராபாத் நகரில் வி.ஐ.பி.க்கள் அதிகம் வசிக்கும் பகுதி குந்தன்பாக். இங்கு, அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் வசிக்கின்றனர். இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸ் கமிஷனரின் அதிரடி படையைச் சேர்ந்த போலீசார் நேற்று அதிகாலை அந்த குடியிருப்பை முற்றுகையிட்டு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள வீடு ஒன்றில், பல ஜோடிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த பிரபல தெலுங்கு கதாநாயகி சாய்ரா பானு, துணை நடிகை ஜோதி மற்றும் உஸ்பெகிஸ்தானை சேர்ந்த பெண் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் ரெய்டில் தெலுங்கு நடிகைகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளது, தெலுங்கு திரையுலகை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
Comments
Post a Comment