கடந்த 1973ம் ஆண்டு திரைக்கு வந்து பயமுறுத்திய பேய் படம் 'தி எக்ஸார்சிஸ்ட்'. வில்லியம் ஃபிரட்கின் இயக்கிய 'எக்ஸார்சிஸ்ட்', ...
கடந்த 1973ம் ஆண்டு திரைக்கு வந்து பயமுறுத்திய பேய் படம் 'தி எக்ஸார்சிஸ்ட்'. வில்லியம் ஃபிரட்கின் இயக்கிய 'எக்ஸார்சிஸ்ட்', வில்லியம் பீட்டர் பிளாட்டி என்ற நாவலாசிரியர் எழுதிய கதையை தழுவி எடுக்கப்பட்டது. ஒரு குழந்தையின் உடம்புக்குள் பேய் புகுந்து செய்யும் அட்டகாசத்தை அதிபயங்கரமாக சொல்லும் படம். 37 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இப்படம் லண்டனில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'மனதை கவர்ந்த படம் எது?' என்று சமீபத்தில் ஆன்லைனில் ரசிகர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் முதலிடத்தை 'தி எக்ஸார்சிஸ்ட்' பிடித்திருக்கிறது.
Comments
Post a Comment