குளோபல் இன்போடெய்ன்மென்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் படம், 'ஆடு புலி'. ஆதி, பூர்ணா, பிரபு, ரவிச்சந்திரன் உட்பட பலர் ந...
குளோபல் இன்போடெய்ன்மென்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் படம், 'ஆடு புலி'. ஆதி, பூர்ணா, பிரபு, ரவிச்சந்திரன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ராஜவேல் ஒளிவீரன். சுந்தர் சி.பாபு இசையில் வாலி, விவேகா, யுகபாரதி, கலைக்குமார் பாடல்கள் எழுதுகின்றனர். விஜய் பிரகாஷ் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது:
டைரக்டர்கள் கே.பாக்யராஜ், பூரி ஜெகன்நாத், ஒய்.பி.சவுத்ரியிடம் பணியாற்றினேன். இப்போது இந்தப் படத்தை இயக்குகிறேன். ஷிவ் யாதவ் அமைத்த 8 அரங்குகளில், முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது. எண்ணூர் துறைமுகம் அருகில், இரும்புத்தாது கலந்த மணற்பரப்பில், ஆங்கில படங்களுக்கு நிகரான கார் சேஸிங் காட்சியை 5 நாட்கள் படமாக்கினோம். மேலும், மாபெரும் மாட்டுக்கொட்டகை அரங்கு அமைத்து, 400 மாடுகளுக்கு மத்தியில் வில்லன் அடியாட்களுடன் ஆதி மோதிய சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. திலீப் சுப்பராயன் பயிற்சி அளித்தார். இக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும்.
Comments
Post a Comment