பெட்டிக்குள் முடங்கி கிடக்கும் 58 படங்கள்!

http://img1.dinamalar.com/cini//CNewsImages/2436tamilcinema.jpg
தமிழ் திரையுலக வரலாற்றில் முதன் முதலாக உருவான படம் காளிதாஸ். இந்த படம் உருவான 1931ம் ஆண்டில் இந்த ஒ‌‌ரே‌யொரு படம் மட்டுமே வெளியானது. அதற்கு அடுத்த ஆண்டு ராமாயணம் உள்ளிட்ட 4 படங்கள் வெளியாயின. இந்த நிலை மெல்ல மெல்ல உயர்ந்து கடந்த சில ஆண்டுகளாக 70க்கும் அதிகமான படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களை குஷிபடுத்தி வருகின்றன. முந்தைய ஆண்டுகளையெல்லாம் விடவும் இந்த ஆண்டு (2010) அதிக அளவிலான படங்கள் வெளியாகியுள்ளன. 2010 ஜனவரி முதல் கடந்த ஜூன் மாதம் வரை 77 படங்கள் ரீலிஸ் ஆகியிருக்கின்றன. இவற்றில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் வெற்றிப்படங்கள் இருக்கின்றன என்ற தகவல் ஒருபுறம் இருக்கையில், இன்னும் தியேட்டருக்கு வராமல் பெட்டிக்குள் முடங்கி கிடக்கும் படங்களின் பட்டியல் நீளுகிறது. கிட்டத்தட்ட 58 படங்கள் தியேட்டர் கிடைக்காதது, சட்டச்சிக்கல், சம்பள பிரச்னை, ‌சென்சார் பிரச்னை உள்ளிட்ட பல காரணங்களுக்காக பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றனவாம். தமிழ் சினிமாவின் இன்றைய இந்த நிலை பரிதாபத்துக்குரிய நிலைதானே!

Comments

Most Recent