‘பசங்க’, ‘களவாணி’ படங்களில் நடித்தவர் விமல். ‘கலிங்கத்துப்பரணி’ என்ற படத்தில் அவர் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் அதிக சம்பளம் கேட்டு, பட...
‘பசங்க’, ‘களவாணி’ படங்களில் நடித்தவர் விமல். ‘கலிங்கத்துப்பரணி’ என்ற படத்தில் அவர் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் அதிக சம்பளம் கேட்டு, படத்தில் அவர் நடிக்க மறுப்பதாக தயாரிப்பாளர் சங்கத்தில் Ôகலிங்கத்துப்பரணிÕ பட தயாரிப்பாளர் சண்முகவேல் புகார் அளித்துள்ளார். இது பற்றி சண்முகவேல் கூறியதாவது: கடந்த நவம்பர் மாதம் Ôகலிங்கத்துப்பரணிÕ படத்தில் நடிக்க விமல் ஒப்பந்தமானார். அந்த ஒப்பந்தத்தில் ஸி6 லட்சம் சம்பளம் பெற அவர் ஒப்புக்கொண்டார். அதற்காக ஸி50 ஆயிரம் அட்வான்ஸ் தொகையாக தந்தேன். ÔகளவாணிÕ படத்துக்கு பின் இதில் நடிப்பதாக தெரிவித்தார். சரி என ஒப்புக்கொண்டேன். அதன் பின் இன்னொரு படத்தில் நடிக்க சென்றுவிட்டார். நானும் இயக்குனர் ஐந்துகோவிலானும் விமலுக்காக காத்திருந்தோம். அந்த இன்னொரு படத்தையும் முடித்துவிட்டார். இப்போது கால்ஷீட் கேட்டால், Ôஉங்கள் படம் டிராப் ஆகிவிட்டது.
‘களவாணி’ ரிலீசாகி, ஹிட் ஆனதால் எனது சம்பளமும் ஏறிவிட்டது. ரூ.60 லட்சம் தந்தால் நடிக்கிறேன்Õ என்கிறார். இது பற்றி தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளோம். இவ்வாறு சண்முகவேல் கூறினார். இது பற்றி விமல் கூறும்போது, Ôஇந்த படம் டிராப் என இயக்குனரும் தயாரிப்பாளரும் சொன்னார்கள். காரணம், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இப்போது இருவரும் சேர்ந்துவிட்டார்கள். படத்தை தயாரிக்கிறோம் என்கிறார்கள். ஆனால் என்னிடம் கால்ஷீட் இல்லை. இதில் நடிக்க ஸி 60 லட்சம் சம்பளம் கேட்கவில்லை. அட்வான்ஸ் பணத்தை திருப்பி தரவும் நான் தயார்Õ என்றார்.
Comments
Post a Comment