தொடர்ந்து கிசு கிசுவில் சிக்கி வருகிறார் ஆர்யா. இது பற்றி அவர் கூறியதாவது:என்னை பற்றி வரும் கிசு கிசுக்கள் பற்றி கேட்கிறார்கள். நான் சினிம...
தொடர்ந்து கிசு கிசுவில் சிக்கி வருகிறார் ஆர்யா. இது பற்றி அவர் கூறியதாவது:என்னை பற்றி வரும் கிசு கிசுக்கள் பற்றி கேட்கிறார்கள். நான் சினிமாவுக்கு வந்தது முதல், என்னுடன் ஜோடியாக நடிப்பவர்களுடன் இணைத்து பேசுகிறார்கள். பூஜா தொடங்கி ஏமி வரை இந்த பட்டியல் தொடர்கிறது. கிசு கிசு வருகிறதே என்பதற்காக யாருடனும் பேசாமல் இருந்துவிட முடியாது. என்னுடன் நடிக்கும் நடிகர்களுடன் பேசுகிறேன். அதே போல ஹீரோயின்களுடனும் பேசுகிறேன். இதில் தவறு என்ன இருக்கிறது. நான் எப்படிப்பட்டவன் என்பது எனக்கு தெரியும், என்னிடம் பழகுபவர்களுக்கு தெரியும். எனது எண்ணம் முழுவதும் நடிப்பில்தான் உள்ளது. அதனால் வதந்திகளை பற்றி கவலைப்படவில்லை. சொந்த நிறுவனம் மூலம்
படித்துறை படத்தை தயாரித்து வருகிறேன். தரமான படங்களை தொடர்ந்து தயாரிக்க விரும்புகிறேன்.இவ்வாறு ஆர்யா கூறினார்.
படித்துறை படத்தை தயாரித்து வருகிறேன். தரமான படங்களை தொடர்ந்து தயாரிக்க விரும்புகிறேன்.இவ்வாறு ஆர்யா கூறினார்.
Comments
Post a Comment